கேரளாவில் அமைந்துள்ள சிறுவாணி அணையும், தமிழகத்தின் மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள பில்லூர் அணையும் கோயம்புத்தூர் நகருக்கு இரண்டு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளன.
இரு அணைகளையும் தூர்வார வேண்டும் என பல்வேறு மன்றங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நீண்ட நாட்களாக அரசை வலியுறுத்தி வரும் நிலையில், சிறுவாணி அணைக்கு தற்போது தூர்வார தேவையில்லை என கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
அணையில் படிந்துள்ள வண்டல் மண்ணின் அளவு குறைந்தபட்சமாக கேரள நீர் வாரியத்தின் குழுவால் கண்டறியப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.