விமான பயணத்தை எளிதாகும் மத்திய அரசின் ‘டிஜி யாத்ரா’ திட்டம் கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஏப்ரல் மாதத்தின் பாதியில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
முகத்தை அடையாளம் கண்டு செயல்படக்கூடிய ஃபேஷியல் ரெகக்னிஷன் டெக்னாலஜி எனும் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த சேவையை கொண்டு விமான பயணிகள் விமான நிலைய முனையத்திற்குள் நுழைவது மற்றும் பாதுகாப்புக்காக சோதனைக்கு உட்படுத்தப்படுவது ஆகிய பணிகளை விரைந்து முடித்துக்கொள்ள முடியும்.