மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்.

5/5 - (1 vote)

கோவை பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பகுதியில் உள்ள பள்ளியில் நேற்று சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் குமாரராஜா, மாவட்ட கல்வி அலுவலர் குளோரி டெல்லா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுபாஷ், பொள்ளாச்சி தெற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் காயத்ரி, பள்ளி முதல்வர் முருகேஷ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர். முகாமில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேசிய அடையாள அட்டை பெற உதவினர். அவர்கள் 58 பேருக்கு அட்டைகளை வழங்கினர். மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களை மருத்துவ குழுவினர் பரிசோதித்து மருத்துவ சான்றிதழ்களை வழங்கினர். சிறப்பாசிரியர்களான மஹிமா, லதா, கார்மல், செல்வி மோகனா, முகிலன் ஆகியோர் இதையெல்லாம் ஏற்பாடு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -
Exit mobile version