கோவையில் கராத்தே திறமையை வெளிப்படுத்தும் வகையில் சர்வதேச அளவிலான போட்டியே நடக்கிறது.

5/5 - (1 vote)

கோயம்புத்தூரில் சர்வதேச அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா வீரர்கள் கலந்துகொண்டனர்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் சர்வதேச அளவிலான சூகி இண்டர்நேஷனல் 2023 என்ற கராத்தே சாம்பியன்சிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா, இலங்கை, இந்தோனேசியாவைச் சார்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று அனல் பறக்க களத்தில் அசத்தினார்கள்.

இந்த போட்டியில் இந்தியாவிலிருந்து மத்திய பிரதேசம், தெலுங்கானா, கேரளா, ஆந்திரா, கர்நாடகா தமிழ்நாடு என ஏழு மாநிலங்களில் இருந்து கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு உபகரணங்களுடன் முறைப்படி நடைபெற்ற இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் வீரர்கள் ஆக்ரோஷத்துடன் மோதிக்கொண்டனர்.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவ்வகையான போட்டி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை மனதளவிலும், உடலிலும் மேம்படுத்துவது மட்டுமில்லாமல் பொதுவெளியில் மற்றும் குடும்பத்தாரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்ற நல்லிணக்கத்தை கற்றுத் தருவதாகவும் பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -
Exit mobile version